கிராமப்புற வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக கூட்டுறவு சங்கங்களை மாற்ற தமது அரசு முயன்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சியில் பயனர்களுடன் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் மற்றும் சர்க்கரை உற்பத்தியை பெருக்கியது போல் வேளாண் மற்றும் மீன்பிடி தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் போது நலத்திட்டத்தால் கிடைத்த நன்மைகள் குறித்து பயனாளிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார்.