முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சீனாவின் மிகப்பெரிய அதிநவீன சொகுசு கப்பல் தனது மூன்று நாள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து, வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து தனது வர்த்தகப் பயணத்தைத் தொடங்குகிறது.
அடோரா மேஜிக் சிட்டி என்ற பெயரில், மொத்தம் 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடன், 323 மீட்டர் நீளமும் 1 லட்சத்து 35 ஆயிரம் டன் எடையும், 16 தளங்களும், 2 ஆயிரத்து 125 அறைகளுடன் 5 ஆயிரத்து 246 பயணிகள் பயணிக்கும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பால்கனி வழியே கடலின் அழகைக் கண்டு ரசிக்கும் வகையில் மேல்தள அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 300 பணியாளர்களுடன், மதுபானக்கூடங்களும், கேளிக்கை விடுதிகளும், 400-க்கும் அதிகமான உணவு வகைகளுடன் கூடிய 26 உணவுக்கூடங்களும் இக்கப்பலில் உள்ளன.