நாட்டின் பெருமைக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் குருமார்கள் வழங்கிய போதனைகளை கடைபிடித்து வாழவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
முகலாயர்களுக்கு எதிராக போர் புரிந்து உயிரை தியாகம் செய்த சீக்கிய சகோதரர்கள் நினைவாக "வீர் பால் திவாஸ்" நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், பாரம்பரியத்தை போற்றும் இந்தியர்களை உலக நாடுகள் உற்று நோக்குவதாக குறிப்பிட்டார்.
முன்னதாக "வீர் பால் திவாஸ்" நிகழ்ச்சியில் சீக்கிய சமூகத்தின் குழந்தைகள் பங்கேற்ற வீரதீர சாகசங்கள் நிகழ்த்தி காட்டப்பட்டன. சிறுவர்கள் வாள்வீச்சில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற வீர் பால் திவஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்தினர்.