உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். இம்பால் போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது.
மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதிநவீன ஏவுகணை அழிப்பு வசதி கொண்ட வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
164 மீட்டர் நீளமுள்ள இந்தப் போர்க்கப்பல் 7,400 டன் எடையைச் சுமந்துசெல்லும் திறன் கொண்டது.
மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பலில், தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள், வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் ராக்கெட்டுகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.