இந்திய பெருங்கடலில் மங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை அடுத்து அங்கு இந்திய கடலோர காவல் படை கப்பலான ஐ.ஜி.சி.எஸ். விக்ரம் விரைந்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் மற்றும் அரபிக் கடற் பகுதியில் வரக்கூடிய இஸ்ரேல் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலுடன் வர்த்தக தொடர்புடைய நாடுகளின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய சவுதியில் இருந்து மங்களூருக்கு வந்து கொண்டிருந்த எம்.வி கெம் புளோட்டோ என்ற கப்பல் மீதுதான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து 217 நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்த போது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலில் தீ பிடித்ததாகவும் அதிலிருந்த 20 இந்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிகிறது.