ஐஸ்லேன்டின் கிரிண்டாவிக் நகரம் அருகே குமுறிவரும் ஃபக்ரடால்ஸ்வியாக் எரிமலையிலிருந்து தீப்பிழம்பு சீறிப்பாய்வதால் அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் சீறிவரும் இந்த எரிமலை வானில் 330 அடி உயரத்துக்கு புகையையும், தீப்பிழம்பையும் உமிழ்ந்தது.
அண்மையில் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்கள் பல வாரங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.