சீனாவின் வடமேற்கில் உள்ள கான்ஷு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
திங்கட்கிழமை இரவு 6.2 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 127 பேர் உயிரிழந்தனர், 536 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவத்தினருடன் சீனாவின் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளில் இருந்து காயத்துடன் மீட்கப்படுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பணியில் மருத்துவக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.