டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கேயின் பெயரை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்தனர்.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கார்கே, முதலில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும், பிரதமர் யார் என்று பின்னர் விவாதிக்கலாம் என்று கூறினார்.