ஹைதராபாத் காவல் நிலைய அதிகாரிகள். ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மோகன் சாய் என்ற சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவனுக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு புற்றுநோய் மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறுவன் மோகனுக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால், ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.
இதையடுத்து, சிறுவனுக்கு சீருடை வழங்கிய போலீசார், தாங்கள் துறை சார்ந்த முறைப்படி வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் சிறுவன் மோகன் சாயை போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய இருக்கையில் அமர செய்து காவல் நிலையத்தின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர்.