சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பிச் சென்றது தொடர்பாக சிறை வார்டன்கள் 2 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் திருட்டுகளில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி.
கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் பகுதியை சுத்தம் செய்ய அனுப்பப்பட்ட போது, அங்கு திறந்திருந்த கதவு ஒன்றின் வழியாக பார்வையாளர்கள் நடுவே கலந்து ஜெயந்தி தப்பிச் சென்று விட்டதாக காவல்துறையில் சிறை நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
ஜெயந்தியை மீண்டும் பிடித்து வர 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெயந்தி தப்பிய போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறை வார்டன்கள் கோகிலா, கனகலட்சுமி ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.