ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களின் முதலமைச்சர்களை தேர்வு செய்வதற்காக பாரதீய ஜனதா கட்சி மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், ராஜஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 3 பேரும், மத்திய பிரதேசத்துக்கு ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்ளிட்ட 3 பேரும், சட்டீஸ்கரில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முன்டா, சர்பாநந்தா செனோவால் உள்ளிட்ட 3 பேரும் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலிடப் பார்வையாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்று புதிய முதலமைச்சர்களை தேர்வு செய்வதை மேற்பார்வையிடுவார்கள் என்றும், அதிகபட்சம் இவ்வார இறுதிக்குள் புதிய முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.