மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை ராயபுரத்தில் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேட்டியளித்த அவர், சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கி உள்ளது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் வந்து காட்டத் தயாரா என்று வினவினார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட்டபோதும் கரையோர மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டிய சூழல் உருவாக இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.