உடல் நலக்குறைவு என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ள செந்தில் பாலாஜியின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.
உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். அதற்கு, செந்தில் பாலாஜியின் நோய் பற்றி குறித்து கூகுளில் தேடிப் பார்த்ததாகவும், அது மருந்துகளால் தீர்வு காணக்கூடிய பிரச்சினை தான் என்று கூகுளில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி திரிவேதி குறிப்பிட்டார்.
பைபாஸ் அறுவை சிகிச்சை எல்லாம் தற்போது குடல்வால் நீக்க அறுவை சிகிச்சை போன்று சாதாரணமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜி வாதத்தை ஏற்றால் 70% சிறைவாசிகள் உடல் நலக்குறைவுடன் இருப்பதாக கருத வேண்டி வரும் என கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜி கூறும் காரணங்கள் மருத்துவ ஜாமீன் வழங்க போதுமானதாக தெரியவில்லை என்றும் மீண்டும் சாதாரண வழக்காக தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.