கல்லூரி ஆய்வகங்களுக்கு பொருட்களை கொண்டு வரும் போர்வையில் 2 ஆண்டுகளாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வந்த விற்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நம்மாழ்வார்பேட்டையில் உள்ள கடை ஒன்றில் குட்கா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ஆய்வு செய்தனர். அங்கிருந்து பல கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களுக்கு யார் சப்ளை செய்வது என்று விசாரித்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், ஓட்டேரியில் வீடு ஒன்றை குடோனாக பயன்படுத்தி 1 டன் குட்காவை பதுக்கி வைத்திருந்த பரமசிவன் என்ற நபரையும், அவரிடம் வாங்கி சென்னையின் பல இடங்களுக்கு சப்ளை செய்து வந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி ஆய்வகங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் தொழில் செய்து வரும் பரமேஸ்வரன், ஆய்வக பொருட்களை கொண்டு வரும் அட்டை டப்பாக்களுக்கு நடுவே குட்காவை மறைத்து கடத்தி வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.