திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி . மஹூவா மொய்த்காவின் பதவியைப் பறிக்க நாடாளுமன்ற நெறிமுறைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
ஏழு பேர் கொண்ட குழுவில் ஆறு பேர் பதவியைப் பறிக்க வாக்களித்ததாகவும் காங்கிரஸ் உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பான்மை ஆதரவையடுத்து இந்தப் பரிந்துரை உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் ஹீராநந்தனியிடம் பணம் லஞ்சமாகப் பெற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய விவகாரம் குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தவும் இக் குழு கோரியுள்ளது.
நாடாளுமன்றக் குழுவின் 500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.