மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் பங்கு குறித்து சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறிய கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
நேற்று பேரவையில் அவர் உரையாற்றியபோது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக பல்வேறு அரசியல் கட்சிகளும், தேசிய மகளிர் ஆணையமும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இன்று நிதிஷ் குமார் பேரவையில் உரையாற்றியபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியபடி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தாம் பேசவில்லை என்றும் தாம் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார