ஏழை மக்களின் வலியை உணர்ந்தே, கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச ரேஷன் தொகுப்பு திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்தின் சியோனில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், வறுமையில் வளர்ந்து வந்த தன்னால் ஏழ்மை என்றால் என்ன என்பதை புத்தகங்களை படிக்காமலேயே உணர முடியும் என்று கூறினார். அதன்காரணமாகவே ஒரு மகனாக, சகோதரனாக, ஏழைகளுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்னர் காங்கிரஸின் ஒவ்வொரு ஊழலும் பல லட்சம் கோடியாக இருந்ததாகவும், பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் இல்லை என்றும் கூறினார். ஏழை மக்களின் உரிமைக்காக மத்திய அரசு சேமித்த பணம், தற்போது ஏழைகளின் ரேஷன் பொருட்களுக்காக செலவிடப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.