‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 141 இந்தியர்கள் மற்றும் 3 நேபாளிகளை அழைத்துக் கொண்டு 6-வது சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
டெல்லி விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு தேசியக் கொடி வழங்கி மத்திய இணை அமைச்சர் ஃபாகன் சிங் குலஸ்தே வரவேற்றார்.
தங்களை பாதுகாப்பாக யுத்த பூமியில் இருந்து அழைத்து வந்த மத்திய அரசுக்கு தாயகம் திரும்பிய இந்தியர்கள், நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்
கடந்த 17ம் தேதி 5ஆவது சிறப்பு விமானம் 18 நேபாளிகள் உள்பட 286 பேருடன் டெல்லி வந்தடைந்தது. இதுவரை 5 சிறப்பு விமானங்கள் மூலமாக மொத்தம் 1200 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக் ஷி அறிவித்துள்ளார்.