ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள 33 பேர் கொண்ட முதல் பட்டியலில் முதலமைச்சர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், சபாநாயகர் சி.பி.ஜோஷி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாரதிய ஜனதாவின் 83 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலில், முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மாநில முன்னாள் பாஜக தலைவர் சதிஷ் பூனியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.