ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க் இங்கிலாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட துன்பர்க் முழக்கங்களை எழுப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
தனது சொந்த நாட்டிலும் ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளிலும் போராட்டங்களில் கலந்து கொண்ட துன்பர்க் கிரேட்டா போலீசாரால் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.