ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர்-குப்வாரா நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு தக்க சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதால் தீவிரவாதத் தாக்குதல் தவிர்க்கப்பட்டது.
சக்தி மிக்க வெடிகுண்டை பத்து கிலோஎடை கொண்ட 3 எல்.பி.ஜி சிலிண்டர்களுடன் இணைத்து தீவிரவாதிகள் சிலர் சாலையில் வைத்திருந்தனர்.
தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் 200 பாதுகாப்பு படை வாகனங்களும் செல்லக்கூடிய அந்த வழியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.