இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
காசா நகரை விட்டு வெளியேற 24 மணி நேர கெடு கொடுத்த இஸ்ரேல் அந்த மக்கள் தப்பிச் செல்லும் போது தாக்கியதாகவும் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
காசாவில் இருந்து பெரும்பாலோர் வெளியேறி வருவதால் 24 மணி நேரம் அவகாசம் போதாது என்று ஐநா.சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் சுமார் 1300 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1800 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது