கடன் செயலிகள் மூலமாக பலர் கடன் வாங்கி கட்டமுடியாமல் துன்புறுத்தப்பட்டதால் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனத் தொடர்புடைய சில செயலிகள் விரித்த கடன் வலையில் பலர் சிக்கி வருகின்றனர். விருதுவாங்கிய இசைக்கலைஞர், இளம் தாய் , இரண்டு மகள்களின் தந்தை, நான்கு பருவ வயதினர் போன்ற பலர் இதற்கு உயிரைப் பறிகொடுத்துவிட்டனர்.
இந்தியா ஆசியா ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த கடன் செயலிகள் இயங்கி வருவதாக பிபிசி நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்படுகிறது.