சென்னை சூளைமேட்டில் அப்பல்லோ மருத்துவமனை கார் ஓட்டுனரை இரும்பு பைப்பால் தாக்கிய அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூளைமேடு வன்னியர் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 7 ஆம் தேதி அன்று நண்பர் வெள்ளை ராஜேஷ் மற்றும் வாட்டர் ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து ஒன்றாக மது அருந்தி விட்டு பின்னர் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போலீஸ் விசாரணையில் சரவணனை தாக்கிய இருவரும் பாஜக மற்றும் அதிமுக பிரமுகர்கள் என்பது தெரிய வந்தது.