ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நிர்வாகித்துவரும் அரசு உலர்திராட்சை இறக்குமதிக்குத் தடை விதித்துள்ளது.
ஏமனில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடைபெற்றுவருவதாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் டன் திராட்சை உற்பத்தி செய்யப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
வேளாண்மையை ஊக்குவிக்கவும், உள்ளூர் விவசாயிகளின் நலன் கருதியும் உலர் திராட்சை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அடைந்த உள்ளூர் விவசாயிகள் திராட்சை சாகுபடியை அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.