திருப்பதி அருகே பாலத்தின்மீதும், ஆட்டோவின் மீதும் தனியார் பேருந்து மோதியதில் கடலூரைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு பேருந்தில் அவர்கள் பெங்களூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் உள்ள சுவற்றின் மீது மோதி நின்றது. இதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பேருந்தில் இருந்த 5 பயணிகள் காயம் அடைந்தனர்.