உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ரஷ்ய படைகள் கிரீமிய தீபகற்பத்தை கைப்பற்றின. உலக நாடுகள் அதனை அங்கீக்கரிக்காத போதும் ரஷ்ய அதிகாரிகள் அங்கு தேர்தல் நடத்தி அரசை நிர்வாகித்து வந்தனர்.
அங்கு உக்ரைன் நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சொந்தமான 500 சொத்துகளை தேசியமையமாக்கிய ரஷ்ய அதிகாரிகள், 815 மில்லியன் ரூபிள் மதிப்பிலான அந்த சொத்துக்களை ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளனர்.