ரஷ்யாவிடமிருந்து 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 12 சுகோய் ரக விமானங்கள் மற்றும 800 கவச வாகனங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புக்கான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், விமானப்படைக்கு 12 சுகோய் விமானங்கள், கடற்படைக்குத் தேவையான 5ம் தலைமுறை ஆய்வுக் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களை வாங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனுடன் 200க்கும் மேற்பட்ட துர்வஸ்த்ரா ஏவுகணைகள், கவச வாகனங்கள் உள்ளிட்டவையும் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆயுதங்கள் உள்நாட்டிலேயே வடிவமைப்பு மற்றும் உற்பத்தி என்ற பிரிவின் கீழ் கொள்முதல் செய்யப்படும் என பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் தெரிவித்துள்ளது.