சனாதன தர்மத்தை ஒழிப்பதே எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணியின் நோக்கம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மத்தியப்பிரதேசம் சென்றார். பினா நகரில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் வளாகம் அமைப்பது உள்பட, மாநிலத்திற்கு 50 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான 10 திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
திட்ட பணிகளை தொடங்கிவைத்து பேசிய பிரதமர், ஆண்டாண்டு காலமாக இந்திய மக்களை சனாதன தர்மம் ஒருங்கிணைத்து வருவதாக தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாடு குறித்து பேசிய பிரதமர், மாநாட்டின் வெற்றி 140 கோடி இந்தியர்களுக்குமான வெற்றி எனக் கூறினார். நாட்டின் கூட்டு சக்திக்கு இதுவே சான்று என்றும் தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தை கண்டு ஜி20 பிரதிநிதிகள் ஈர்க்கப்பட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.