ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக உண்மையான காரணத்தை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி, 50 மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர், காது கேட்கும் கருவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.