மிக அதிகமான காரமுள்ள சிப்சை உட்கொண்டதாகக் கூறப்படும் அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தான்.
சிப்ஸ் சாப்பிடும் சவால் என்று சிப்ஸ் நிறுவனம் ஒன்று சமூக வலை தளங்களில் விளம்பரம் வெளியிட்டு இருந்தது. அதைப் பார்த்து ஆன்லைனில் ஆர்டர் செய்து மிக அதிக காரம் நிறைந்த சிப்ஸ் பாக்கெட் ஒன்றை மசாசூசெட்ஸ் நகரைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்ற 14 வயது சிறுவன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்த சிப்ஸை சாப்பிட்டு விட்டு பள்ளி சென்றதாக கூறப்படும் அந்த சிறுவனுக்கு பள்ளியில் வயிறு வலி ஏற்பட்டதால் செவிலியர் ஒருவர் முதலுதவி அளித்து வீட்டுக்கு அனுப்பி உள்ளார். வீடு திரும்பிய பிறகு சிறுவன் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.
ஹாரிஸ் ஒலாபா மரணத்துக்கு அதிக காரம் கொண்ட சிப்சே காரணம் என்று தாயார் புகார் கூறியதை அடுத்து, சிப்ஸ் விற்பனையை ஆன்லைன் நிறுவனங்கள் திரும்பப் பெற்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட சிப்ஸ் விற்பனையை நிறுத்திவிட்டதாக அமேசானும் தெரிவித்தது. இதுபோன்ற விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.