தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்ததாகவும், 253 பேர் டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் டெங்கு ஒழிப்புப் பணியில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமாக டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியைப் போல தமிழகத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.