அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரும் பட்சத்தில், அவர் பிரேசிலில் வைத்து கைது செய்யப்பட வாய்ப்பே இல்லை என அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரின் போது பிடிபடும் சிறுவர், சிறுமியரை சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தியதாக குற்றம்சாட்டி புடினை கைது செய்யுமாறு சர்வதேச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்காத புடின், கடந்த மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டையும் புறக்கணித்தார். இந்நிலையில் பிரேசிலுக்கு வந்தால் புடின் கைது செய்யப்பட மாட்டார் என அந்நாட்டு அதிபரும் தீவிர இடதுசாரியான இனாசியோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.