ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் பாரத மண்டபம் அரங்குகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் கலை பண்பாட்டு கூறுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் ஓவியம் முதல் காஷ்மீர் ஷால்கள், கைவினைப் பொருட்கள், சிற்பங்கள், வண்ணநீரூற்று போன்றவற்றின் கண்கவர் காட்சி வெளிநாட்டு விருந்தினர்களின் கருத்துக்கும் கண்ணுக்கும் விருந்தளிக்க வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.30 மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், டிஜிட்டல் பஜார் கண்காட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.இதில் இந்தியாவின் ஆதார், டிஜி லாக்கர், உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன.