சென்னையில் மது போதையில் காரை ஓட்டி வந்த இளைஞருக்கு, அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த போலீசாரிடம், சாவியை தர மறுத்து அடாவடியில் ஈடுபட்டார்.
நந்தனம் சிக்னல் அருகே வாகன தணிக்கையின் போது கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை இளைஞர் ஒருவர் மது போதையில் இயக்கியது தெரியவந்தது.
அவருக்கு அபராதம் விதித்த நிலையில் , தனது தந்தை டிபன்ஸ் ஆபீஸர் எனக்கூறி கார் சாவியை தர மறுத்து போலீசாரிடம் மிரட்டும் விதமாக வாக்குவாதம் செய்துள்ளார்.
இச்சம்பவத்தினை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களின் கேமராவையும் தள்ளிவிட்டு அந்த நபர் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.
விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் கர்நாடகாவை சேர்ந்த ராபின் சிங் என்பதும் , நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற மது விருந்தை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் காவலர்களிடம் சிக்கியதும் தெரியவந்தது.