சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது.
பிளமிங்கோ என்ற பெயர் கொண்ட எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணியை பூஜை செய்த பின்னர் திட்ட இயங்குனர் அர்ஜூனன் தொடங்கி வைத்தார்.
700 மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த பிளமிங்கோ இயந்திரம் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் திறன் கொண்டதாகும்.
இந்த இயந்திரம் தனது பணியை இன்று தொடங்கி கலங்கரை விளக்கம், கச்சேரி சாலை, திருமயிலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக சுரங்கம் தோண்டியபடி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் போட் கிளப் வந்தடையும்.
பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 26 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள 4வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இருந்து இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேல் மற்றும் கீழ் சுரங்கங்களாக செல்லும் இவை சென்னை கலங்கரை விளக்கம் வரை தோராயமாக இரண்டு பாதைகளையும் சேர்த்து 16 கிலோமீட்டர் முழுவதும் தோண்டி முடிக்க நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.