ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அனைத்து சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டால் செலவுகள் குறையும் என மத்திய அரசு கூறி வருகிறது.
இதனிடையே, வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டாலம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், ஒரே நாடு ஒரே தெர்தல் பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.