ஸ்பெயினில் வருடாந்திர தக்காளி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிழக்கு ஸ்பெயினில் அமைந்துள்ள புனோல் நகரில் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டதில் நகரமே தக்காளி மழையில் நினைந்து சிவப்பு நிறமாக மாறியது.
ஸ்பெயினில் 1945-ம் ஆண்டில் கிராம மக்கள் தற்செயலாக கொண்டாடிய இந்த தக்காளி திருவிழா, 1950ம் ஆண்டுகளில் ஜெனரல் பிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியில் சில ஆண்டுகள் தடைபட்டது.
பின்னர் 1980-களில் ஸ்பெயின் முழுவதும் பிரபலமான தக்காளி திருவிழாவில் பங்கேற்க தற்போது வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தக்காளி திருவிழாவில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றதாகவும், 120 டன் பழுத்த தக்காளிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.