தெலுங்கானா மாநிலம் நந்தியாலா அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
ஒரு கடையில் ஏற்பட்ட தீ மளமளவென அனைத்து கடைகளுக்கும் பரவியதில், 14 கடைகள் முற்றிலும் எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.