சகோதர, சகோதரிகள் இடையேயான அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய கலாச்சாரத்தின் புனிதத்தை பிரதிபலிக்கும் ரக்சா பந்தன் விழா, அன்பு, நல்லிணக்கம் மற்றும் நட்புணர்வை ஆழப்படுத்தட்டும் என கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் பள்ளி சிறுமிகள் ரக்சா பந்தன் கொண்டாடினர். ரக்சா பந்தன் கயிறு கட்டிய பள்ளிச் சிறுமிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.