இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகிய அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதற்கும் உரிமை கோரும் விதமாக சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
அக்சய் சின் மாகாணம் போன்ற சில எல்லைப் பிரதேசங்களையும் சீனா தங்களது பகுதியாக இணைத்துக் கொண்டுள்ளது.
அந்நாட்டின் இயற்கை வளம் அமைச்சகம் வெளியிட்ட இந்த புதிய வரைபடம் சீனா உரிமை கோரி வரும் மேற்கு எல்லைப் பகுதிகளை இணைத்துக் கொண்டது.
தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தம் என்றும், தைவானின் கிழக்குப் பகுதியும் தங்களுக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளது.
சீனாவின் வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் இடம் பெறுவது மூன்றாவது முறையாகும் இதற்கு இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வர உள்ள சூழலில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் சீனா இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.