திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஏமாற்றிய சீமானை கைது செய்யும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றும் நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
சீமானுக்கு எதிராகவும், அவரது தூண்டுதலின் பேரில் தம்மை மிரட்டிய மதுரை செல்வம் என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சென்னை காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தபின் பேட்டியளித்த விஜயலட்சுமி இதனை தெரிவித்துள்ளார்.