மும்பையில் 31ம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி கூட்டத்தில் புதிதாக சில கட்சிகள் இணைகின்றன.
ஏற்கனவே 26 கட்சிகள் இணைந்துள்ள இக்கூட்டமைப்பில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
4 அல்லது 5 கட்சிகள் இக்கூட்டமைப்பில் இணையக்கூடும் என்றும் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணிக்கான புதிய இலச்சினையையும் வெளியிடப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தொடங்கி விட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.