சீனாவுக்கு இந்திய மண் தாரை வார்க்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாதவை, அபத்தமானவை என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை வெளியிடுமாறு வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது சீனாவுக்கு ஆதரவாக ராகுல் பேசுவது வாடிக்கையாகி விட்டதாகவும் பாஜக சாடியுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு பாதகம் வரக்கூடாது என்று பாகிஸ்தானை தீவிரவாதத்திற்காக தண்டிக்காமல் காங்கிரஸ் அரசு விட்டு விட்டது என்றும் தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று மோடி அரசு திட்டவட்டமான முடிவு எடுத்திருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.