பொதுவாக அறிமுகமான மருந்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்வது கட்டாயம் என்ற விதிமுறை மருத்துவ குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மருந்து நிறுவனங்களிடமிருந்து ஆதாயம் பெறுவதும் குறிப்பிட்ட சில மருந்துகளை தரம் குறித்த நிச்சமற்ற தன்மையில் பரிந்துரைக்கவும் இந்த விதிமுறை தடை விதித்தது.
இந்நிலையில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் விதிமுறைகள், ஆகஸ்ட் 2ம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
இதில் மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைப்பது கட்டாயமாக்கும் விதிமுறை வெளியானதும் பல்வேறு மூத்த மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர்.
மருத்துவர்களின் கருத்துகளை கேட்டறிந்த தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிமுறையை நிறுத்தி வைத்தது.