இந்திய விமானப் படைக்கு நூறு LCA Mk-1A போர் விமானங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் Mk-1A ஜெட் முதல் டெலிவரியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். 2 ஆண்டுகளுக்கு முன்னால் 83 ஜெட் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கையெழுத்தாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து மேலும் 100 விமானங்கள் வரை உள்நாட்டில், அதாவது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான இந்திய விமானப்படையின் முடிவு, ஆத்ம நிர்பர் பாரத் என்ற சுயசார்பு திட்டத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.