தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்யானந்தாவை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்தி உள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில், பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கார்ல்சனுக்கு எதிரான போட்டி சிறிய சாதனையல்ல என்று குறிப்பிட்டுள்ள மோடி, பிரக்யானந்தாவுக்கு வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரக்யானந்தாவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் பேசினார்.
இந்தியா வரும்போது பிரக்யானந்தாவை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி வரவேற்பார் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தானும் சந்திக்க ஆவலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.