இந்தியப் பொருளாதாரத்தில் உலகளாவிய நம்பிக்கையை காண்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக வளர்ச்சி கண்டுள்ள இந்தியா, அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிறுகுறு தொழில்களின் முன்னேற்றத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும், அவற்றின் மூலம் 60 முதல் 70 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்த பிரதமர், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிக்கை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.