மத்திய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோதனை அடிப்படையில் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளை சூரிய சக்தி மூலம் இயங்கும் வகையில் மாற்றி அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் தலா 30 சதவீத நிதி வழங்கும் எனவும், மீதி 40 சதவீத நிதியை மின்வாரியத்தின் மூலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பாசன பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது போக, எஞ்சிய மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் 28 பைசாவிற்கு மின்வாரியம் பெற்று, வங்கி கடனை அடைக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.