மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 40 பேர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ரயில்வே அதிகரிகள் மற்றும் மீட்புகுழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி, மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பலியானர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.